பள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவன் பரிதாபமாக பலி ! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் விஷ்ணு நகரை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (45). இவரது மகன் லட்சுமிபதி. இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். லட்சுமிபதி இன்று காலை வணக்கம் போல் அவரது சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். தாம்பரம் முடிச்சூர் சாலையில் தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் அணுகு சாலையோரம் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை கண்ட லட்சுமிபதி சைக்கிளை ஓரமாக நிறுத்தி உள்ளார். லாரி ஆனது சைக்கிள் நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல் ஓரமாக நின்று கொண்டிருந்த லட்சுமிபதியின் மீதுஅந்த லாரி ஆனது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமிபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார்ருக்கு அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனர் மேற்கு தாம்பரம் கடப்பேரியைச் சேர்ந்த சந்திரசேகரன் (36) என்பவரை கைது செய்தனர். இதே சாலையில் இம்மாதம் ஒன்னாம் தேதி இதுபோன்ற டாரஸ் லாரி மோதியதில் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் சென்ற மேல் தாம்பரத்தைச் சேர்ந்த சண்முகவேல் (50) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாதத்திலேயே இரண்டு முறை அதே இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கி கால் இறந்துள்ளார். இந்தத் தொடர் விபத்தால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தாம்பரம் முடிச்சூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் தாம்பரம் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார் அவர் கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நகருக்குள் நுழையாத வகையில் தடை விதிப்பதாகவும் மற்றும் போக்குவரத்து நெர்சலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரை பணி அமர்த்துவதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்து அந்த போராட்டம்மானது நிறைவு பெற்றது. பள்ளி சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.