ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருக்கின்ற கீழக்கோட்டை கிராமத்தை சார்ந்தவர் முனியசாமி இவருடைய மனைவி வேணி இவர்களுடைய மகன் ராஜு (17)என்ற இவர் ராமநாதபுரத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
சென்ற ஞாயிறு அன்று விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்த அவரிடம், தாய் வேணி வீட்டில் இருந்த கோழிகளைப் பிடித்து அடைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த வேணி அவரை கண்டித்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில்தான் தாய் கண்டித்ததன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ராஜு, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
வேணி வீடுதிரும்பியபோது வீடு உட்புறமாக பூட்டி இருந்ததால் அண்டை வீட்டாரின் உதவியுடன் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.
அங்கே தன்னுடைய மகன் ராஜு தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து கதறி அழ தொடங்கினார். இது தொடர்பான தகவலின் அடிப்படையில் சத்திரக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ராஜுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தாய் வேணி வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன.