12ம் வகுப்பு மதிப்பெண் கொடுப்பது எவ்வாறு? விளக்கம் தந்த பள்ளிக்கல்வித்துறை

0
128

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் தந்திருக்கிறார்.


நோய் தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்சி மற்றும் மாநில கல்வி பாடத்திட்டத்தில் நடத்தப்படும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த சூழ்நிலையில் நேற்று சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிக்கை ஒன்றை நடைபெறுகின்றது.

அதைப்போலவே தமிழ்நாட்டிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு தொடங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில விளக்கங்களை கொடுத்து இருக்கின்றார்.இந்த சூழ்நிலையில், நேற்று திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுப்பது குறித்து பல ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலோசனையின் அடிப்படையிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் முறையையும், ஆய்வு செய்து எல்லாத் தரப்பு மாணவர்களையும் திருப்திப்படுத்தும் விதமாக மதிப்பெண் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்..

தனியார் பள்ளிகளில் மிக அதிகமான கட்டணம் வசூலிக்க படுவதாக பல புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பள்ளி கட்டணத்தை கட்டவில்லை என்று இணையதள வகுப்புகள் அல்லது சூம் மூலமாக நடத்தப்படும் வகுப்புகள் துண்டிப்பதாக புகார்கள் வந்தால் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்ற ஆட்சிக்காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டு லட்சம் மடிக்கணினிகள் இன்னும் வழங்கப்படவில்லை. அந்த மாணவர்களுக்கும் சேர்த்து தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மடிக் கணினிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

கல்வி பெறும் உரிமை சட்டத்தில் சென்ற ஆட்சிக்காலத்தில் பாகுபாட்டுடன் செயல்பட்டார்கள் இனி அந்த மாணவர்களிடம் பாகுபாடு எதுவும் காட்டப்படாது அந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் நிலுவைத் தொகை இருக்குமானால் அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிடப் படுகிறது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கின்றார்.