அடுத்த பிரதமர் யார்? டெல்லிக்கு விரையும் முக ஸ்டாலின்! ஒன்றுகூடும் 28 கட்சி தலைவர்கள்!

0
607
indialliance

பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி செல்ல உள்ளார்.

7 கட்டங்களாக நடந்Rahul gது வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வரும் 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், வரும் 1-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தவுள்ளனர். காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அஸ்கைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா கூட்டணி தலைவர்களின் இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக சார்பாக பேச வேண்டிய கோரிக்கை மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து இன்று காலை 11 மணிக்கு தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார். கூட்டம் முடிந்து 2-ந்தேதி சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

1-ந்தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள உள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.