Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பி.எம்.கிஷான்! இன்று வெளியிடப்படுகிறது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள 11வது தவணை நிதிக்காக நாடு முழுவதும் தகுதியான விவசாயிகள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், 11வது தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்படவிருக்கின்ற தேதி தொடர்பான அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது சுமார் 1 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக தலா 2,000 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி.

தகுதிவாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையும் பட்சத்தில் ஒரு நிதியாண்டில் 3 முறை அவர்களின் வங்கி கணக்கில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா தவணை நிதி தலா 2000 ரூபாய் வீதம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதன் மூலமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் தலா 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வருமான ஆதாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 10வது தவணை நிதி ஏற்கனவே இந்த வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதி வழங்கப்பட்ட சூழ்நிலையில் அடுத்ததாக 11ம் தவணை நிதிக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 11வது திதி பலன்களை தகுதியுடைய சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு இன்று வழங்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி.

இந்த பிரதான் மந்திரி கிசான் யோஜனாவின் 11வது தவணை இன்று பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் வெளியிடப்படுகிறது என்று வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Amrit mahotsav வருட கொண்டாட்டத்தின் கீழ் பல்வேறு மத்திய அமைச்சர்களின் கூட்டு நிகழ்வு இன்றைய தினம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றுகொள்கிறார்.

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் garib kalyan sammelan என்றழைக்கப்படும் இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சியில் 9 மத்திய அமைச்சகங்கள் மூலமாக நடத்தப்படும் 16 திட்டங்கள், திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாடவிருக்கிறார்.

இதைத்தவிர பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11வது தவணை நிதியை 10 கோடிக்கும் மேலான விவசாயிகளுக்காக அவர் வெளியிடுகிறார்.

இதன் மதிப்பு ரூபாய் 21,000 கோடி என சொல்லப்படுகிறது, வழக்கம்போல இந்த நிதி நேரடியாக தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சிகளின் போது பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் திட்டங்களான pm-kisan ,பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா, ஸ்வச் பாரத் மிஷன், ஜல் ஜீவன் மெஷின் உள்ளிட்டவை பொது மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன? என்பது தொடர்பாக பயனாளிகளுடன் உரையாடுவார்.

இந்த தேசிய நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் தேசிய மற்றும் பிராந்திய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அத்துடன் mygov மூலமாகவும் வெப்ஹாஸ்ட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version