Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Pm-kisan திட்டத்தின் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டதா? தெரிந்துகொள்வது எப்படி?

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் pm-kisan திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு விவசாயத்தை சார்ந்த குடும்பமும் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 3 தவணைகளில் ஒரு குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

தங்களுடைய பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் பிரதமர் கிசான் திட்டத்தின் மூலமாக பயன் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என சொல்லப்படுகிறது.

இந்த கிசான் திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க வேண்டுமென்றால் உரிய ஆவணங்களை சமர்ப்பணம் செய்து விவசாயிகள் முதலில் கிசான் திட்டத்தில் இணைய வேண்டும்.

இதுவரையில் இந்தத் திட்டத்தில் 10 தவணைகள் விவசாயிகள் கணக்கில் வந்து சேர்ந்திருக்கின்றன. 11வது தவணை நேற்று முந்தினம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது, பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்சமயம் கிசான் திட்டத்தில் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கில் 2000 ரூபாய் வந்து சேர்ந்து விட்டதா? என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

பணம் உங்களுடைய வங்கி கணக்கில் வந்து சேரும்போது வங்கியின் மூலமாக உங்களுடைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

இவன் மூலமாக உங்களுடைய வங்கி கணக்கில் கிசான் தாமரை செலுத்தப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் இதனை தவிர்த்து இணையதளத்திலும் இது தொடர்பாக நாம் அறிந்து கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது முதலில் நீங்கள் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான pmkisan.gov.in என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்,அப்படி சென்றவுடன் முகப்பு பக்கத்தில் விவசாயிகள் கார்னர் விருப்பம் என்ற ஆப்ஷன் தென்படும்.

அதன் கீழ் பயனாளி நிலை என்ற விருப்பத்தை தாங்கள் தேர்வு செய்ய வேண்டும், பயனாளியின் நிலை என்ற விருப்பத்தை தேர்வு செய்தவுடன் ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கப்படும். இங்கே நீங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண், கைபேசி எண், உள்ளிட்ட விவரங்களை மிகச்சரியாக உள்ளிட வேண்டும்.

அப்படி உள்ளிட்டவுடன் தற்போது டேட்டாவை பெறு என்பதை தேர்வு செய்ய வேண்டும், இப்போது உங்கள் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் .

அதேபோல கிசான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ekyc கட்டாயமாகும். ஆதார் அடிப்படையிலான ஓடிபி முறைக்கு உழவர் ekyc விருப்பத்தை தேர்வு செய்ய இதனை அப்டேட் செய்யலாம்.

Exit mobile version