Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசு வழங்கும் கிசான் நிதியுதவி திட்டம் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டிலுள்ள சிறு, குறு, விவசாயிகளுக்கு உதவி புரியும் விதமாக பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2019 ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இணையின் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 1 வருடத்திற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை 2000 வீதம் 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது 4 மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பலனடையும் விதமாக 11 வது தவணையாக 21,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 31ம் தேதியன்று வெளியிட்டார். ஒரு நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் தவணை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 3 முறை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் முதல் தவணையும், ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் 2வது தவணையும், அதோடு டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 3வது தவணைக்கான காலமாகவும், கணக்கிடப்படுகிறது.

இதுவரையில் விவசாயிகள் அடுத்த தவணை தொடர்பான அறிவிப்பு உள்ளிட்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக செயல்படும் இணையதளத்தை அணுகுவது மட்டுமே தீர்வாக இருந்த நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் விவசாயிகள் தங்களுடைய விண்ணப்ப நிலை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கும் தொகை எவ்வளவு? உள்ளிட்ட தகவல்களை பிரதமர் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ pmkisan.gov.in வலைதளத்திற்கு சென்று தங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை உள்ளிடுவதன் மூலமாக சரிபார்க்கும் நடைமுறையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதற்கு பதிலாக விவசாயிகள் கிசான் போர்ட்டலில் தங்களுடைய ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண் மூலமாக இந்த திட்டத்தை சரி பார்க்கும் முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.

விவசாயிகள் தற்போது தங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து தகவல்களை சரி பார்க்கும் வசதி மறுபடியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலமாக சரி பார்ப்பது எப்படி? என தற்போது நாம் காணலாம்.

pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

பயனாளியின் நிலையை அறிந்து கொள்வதற்கு Beneficiary status என்பதை கிளிக் செய்யவும், தற்போது புதிய பக்கமொன்று தோன்றும்.

உள்ளீடு விவரங்களை வழங்குவதற்கு பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக image text or captch எது தோன்றுகிறதோ அதனை பட குறியீட்டு பெட்டியில் பதிவிடவும்.

அதன் பிறகு பயனாளியின் நிலையை சரி பார்க்க தரவை பெறு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Exit mobile version