Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்வதேச மகளிர் தினம்! பெண்களை பெருமைப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

பெண்களின் தியாகம், அவர்களுடைய மனவலிமை, சமுதாயத்திற்கு அவர்களுடைய இன்றியமையாத பங்கு, உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த விதத்தில் மார்ச் மாதம் 8ஆம் தேதியான நேற்றைய தினம் உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெண்களை சிறப்பிக்கும் விதத்தில் பல இடங்களில் கருத்தரங்கு, சிறப்பு பொதுக் கூட்டம், உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதோடு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நேற்று ஒரு கருத்தரங்கம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அதில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, சாத்வி நிரஞ்சன், ஜோதி, பாரதி பிரவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது.

இந்த கருத்தரங்கில் காணொளி மூலமாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது உள்நாட்டு தயாரிப்புக்கு ஆதரவு என்ற முழக்கம் பொருளாதாரத்துக்கான முக்கிய அம்சமாக மாறி உள்ளது. அது பெண்களுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டது என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் வெற்றி பெண்கள் கையில்தான் உள்ளது எனவே உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு பொதுமக்களை பெண்கள் தங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலமாக ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு தயாரிப்பு என்றால் தீபாவளி விலைக்கு வாங்கினால் போதும் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனாலும் அதையும் கடந்து உள்நாட்டு தயாரிப்புகளை அனைவரும் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்பெல்லாம் பெண்களின் பெயரில் சொத்துக்கள் இருக்காது கணவர் பெயரிலோ அல்லது மகள் பெயரிலோ சொத்துக்கள் இருக்கும் ஆனால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் வீடுகள் வழங்கப்படுவதால் அவர்கள் உரிமையாளராகி வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று முன்பெல்லாம் பெண்களின் பெயரில் வங்கி கணக்கு இருக்காது ஆனாலும் தற்சமயம் 23 கோடி பெண்கள் பெயரில் சந்தன் வங்கி கணக்குகள் இருக்கின்றன. 9 கோடி விஸ்வா சமையல் எரிவாயு இணைப்புகள் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் அவர்கள் விரகு அடுப்பு புகையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவி வழங்கப்பட்டு வருகின்றது. பள்ளிகளில் பெண் குழந்தைகள் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும் மசோதா நாடாளமன்ற பரிசோதனையில் இருந்து வருகிறது.

பெண்கள் தங்களுடைய கனவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தியா திட்டத்தின் மூலமாக 80 சதவீத கடன்கள் பெண்களின் பெயரில் வழங்கப்படுகின்றன. முத்ரா திட்டத்தில் 70 சதவீத பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது பணி இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக பணியாற்ற மிக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

கற்பழிப்பு உள்ளிட்ட கொடிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க அதில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெண்கள் முழுமையாக பங்கு பெறுவதை நாடு விரும்புகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Exit mobile version