ஒன்றிணையும் அதிமுக கூட்டணி கட்சிகள்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

0
144

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தங்களுடைய கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த விதத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நடிகர் சரத்குமார் அவர்களின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தன்னுடைய கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்.

அதேபோல எதிர்க்கட்சியான திமுகவும் தன்னுடைய கூட்டணி கட்சிகளை ஆதரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு தன்னுடைய கூட்டணி கட்சியை வேட்பாளர்களையும் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

இதனால் தமிழகம் முழுவதும் திக்குமுக்காடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் ஓய்வே இல்லாமல் தேர்தல் நெருங்கி வருகின்ற காரணத்தால், தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற தொகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள் இதனால் தமிழக மக்களும் ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திக்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில் இருந்து வருகிறார்கள்.அந்த விதத்தில் எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பதற்காக நாளை தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் முருகன் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாளை 11:30 மணி அளவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் போன்றோர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தாராபுரம் சட்டசபை தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் உள்பட 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவிருக்கிறார். அவருடைய வருகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதிலுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.