திடீரென்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி! ஆடிப்போன அதிகாரிகள்!

0
138

அண்மையில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 64 1500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பாக திட்டமிடப்பட்டது இந்த புதிய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நூலகம், பல அறைகள், உணவு உண்ணும் பகுதிகள், அதோடு போதுமான பார்க்கிங் வசதி உள்ளிட்ட அவற்றுடன் மிகப்பிரமாண்டமான அரசியல் அமைப்பு மண்டபமும் இதில் இடம்பெற்று இருக்கும் என்று சொல்லப்படுகிறது. புதிய கட்டிடத்தில் இருப்பதால் லோக்சபா சுமார் 888 உறுப்பினர்களைக் கொண்ட இருக்கை வசதியையும் கொண்டிருக்கும் எனவும், ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு 384 இடங்களையும் இதில் ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக சுமார் 22 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டது, இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருந்தாலும் இதனை மத்திய அரசு பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டிட பணிகளுக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டினார் அதன் பின்னர் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் இரவு டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பகுதியை பார்வையிட்டார் சுடிதார் உள்ளிட்டவற்றை அணிந்து நேற்று இரவு சுமார் எட்டு முப்பது மணி அளவில் அவர் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி கட்டுமான நிலையை நேரில் ஆய்வு செய்து இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை அதிகாரிகள் விளக்கிக் கூறினார்கள். அதேபோல கட்டுமான தொழிலாளர்களையும் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து இருக்கின்றார்.

சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டிய பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டும் பணியிடத்திற்கு பிரதமருடைய முதல் வருகை இது என்று சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26ம் தேதிக்குள் இந்த கட்டிட பணிகள் முடிவடையும் என்று சென்ற வாரம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கூறி கூறியிருந்த சூழ்நிலையில், இந்த ஆய்வை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருக்கிறார்.

அதோடு அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இருக்குமெனவும் அனேகமாக ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த கட்டிடத்திற்கான திறப்புவிழா நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.