ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

0
213
#image_title

ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

 

இந்த சந்திப்பின் போது இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என பிரதமர் மோடி புகழாரம்

தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.

இந்த நிலையில் படக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார் அந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில்

‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்தின் வெற்றி உலகளாவிய கவனத்தையும் பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது. இன்று, பெரும் திறமை உடைய பட குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர். என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.