Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் மோடியின் அதிநவீன வசதிகள் பொருந்திய புதிய கார்! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவதற்காக தலா 12 கோடி செலவில் மெர்சிடிஸ் மேபக் 650 கார்டு ரக கார்களில் இரண்டு வாங்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கினர்.

இந்தக் கார்கள் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை என்று சொல்லப்படுகிறது, இது தொடர்பான புதிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று வெளியிட்டிருக்கின்றன.

அதனடிப்படையில், ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட வாங்கப்பட்டு இருக்கின்ற கார்களின் விலை மிகவும் குறைவு, கார் விலையை ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விலையில் மூன்றில் ஒரு பங்கு தான் என்று சொல்லப்படுகிறது.

எஸ் பி ஜி பாதுகாப்பு படை வரையறையின் அடிப்படையில், ஆறு வருடங்களுக்கு ஒருமுறை பிரதமர் பயன்படுத்தும் கார் மாற்றப்படவேண்டும், ஆனால் பிரதமர் மோடியின் கார்கள் எட்டு வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இதன் காரணமாக, தணிக்கையின் ஆட்சேபம் வெளிவந்திருக்கிறது இது பிரதமரின் உயிருடன் சமரசம் செய்து கொள்வது போல இருக்கிறது என்ற கருத்தும் வெளிவந்திருக்கிறது.

பிரதமர் கார் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பரவலான விவாதம் தேசிய நலனில் இல்லை, ஏனென்றால் இது பொது காலத்தில் தேவையில்லாத விவாதங்களுக்கு வழிவகுக்கிறது. இது பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தலாக மட்டுமே இருக்கிறது, எந்த கார்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு முன்னுரிமையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரிக்கும் கார்களை தான் பல வருட காலமாக பிரதமர் பயன்படுத்தி வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version