மோடியின் அமெரிக்க பயணத்தின் சிறப்பம்சங்கள்!

0
133

இந்தியா எப்போதும் அமெரிக்காவுடன் ஒரு நல்ல நட்புறவுடன் தான் இருந்து வருகிறது. இதன் காரணமாகதான் தீவிரவாதிகளும், பாகிஸ்தானும் நம்மிடம் வாலாட்டுவதில் சற்று யோசித்து செயல் படுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா இருந்த சமயத்தில் இந்தியா அவருடன் அதிக நெருக்கத்துடன் இருந்துவந்தது இதனால் உலக நாடுகள் பலவும் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதோடு சில பல விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்ட சமயத்தில் சீனாவை ஐநாவின் உறுப்பு நாடுகள் என்ற பட்டியலில் இருந்து விடுவித்து விட்டு இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பு நாடு என்ற அந்தஸ்தை பெற்றுத் தருவதில் அமெரிக்கா முனைப்பு காட்டியது.

இந்த நிலையில், ஒரு மிகப் பெரிய இடைவெளிக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பல உலக தலைவர்களும் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த சூழ்நிலையில், அதையே பிரதமர் நரேந்திர மோடியும் பின்பற்றினார். இந்த சூழ்நிலையில், டெல்லியில் இருந்து 3 நாள் பயணமாக அமெரிக்கா கிளம்பிய பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் அதிகாலை அமெரிக்காவில் இருக்கக்கூடிய வாஷிங்டன் நகரை சென்றடைந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு உச்சிமாநாடு ஐநா பொதுச்சபையில் உரை போன்ற பல திட்டங்களுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. வாஷிங்டன் நகரில் அமெரிக்க தலைவர்களை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அன்று நியூயார்க் நகரில் நடைபெற இருக்கும் ஐநா பொது அவையில் உரையாற்ற உள்ளார். இதற்கு முன்னதாக அமெரிக்காவின் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க இருக்கிறார்.

இன்று பிற்பகலில் வெள்ளை மாளிகையில் கமலா ஹாரிஸ் அவர்களை சந்தித்து உரையாற்றியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சந்திப்பு அமெரிக்காவில் உள்ள இந்தியாவின் புலம்பெயர்ந்து ஒரு சமுதாயத்திற்கு ஒரு மிக முக்கியமான சந்தர்ப்பம் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

அதோடு அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார் குவால்காம் ஆட்டோமாக்ஸ் டோன் போன்ற முக்கியமான மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவில் அவர்களுடைய முதலீட்டு வாய்ப்புகளை பெருக்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்ய இருக்கிறார்.