பிரதமர் மோடி இன்று 2 மாநிலங்களுக்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று 2 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். முதலீட்டு மாநாடு மற்றும் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் இன்று பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு முதலீட்டு மாநாடு, வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இன்று காலை 10 மணியளவில் லக்னோவில் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார். உலகளாவிய வர்த்தக கண்காட்சி மற்றும் முதலீட்டாளர்களுக்கான இன்வெஸ்ட் உ.பி. 2.0 என்ற அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு மதியம் 2:45 மணியளவில் மும்பையில் உள்ள டெர்மினஸில் இருந்து சோலாப்பூர் வந்தே பாரத் மற்றும் மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும்