Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் நரேந்திர மோடி திடீர் குஜராத் பயணம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்!

குஜராத் மாநிலத்தில் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

குஜராத் மாநிலம் நவ்சாரியில் நடைபெறவுள்ள குஜராத் கவுரவ் அபியான் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்று கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ளும் பிரதமர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ம் தேதி குஜராத் செல்ல உள்ளார் அங்கு நடைபெறவுள்ள குஜராத் கவுரவ் அபியான் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ளும் பிரதமர் அங்கே பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அதிகார மையத்தின் தலைமையகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version