இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், உள்ளிட்ட 4 நாடுகள் ஒன்றிணைந்து குவாட் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் காணொளி மூலமாக இணைய மாநாடு நடைபெற்றது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர்.
இன்றைய சூழ்நிலையில், அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொள்கிறார், இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்திருக்கிறார்.
அதோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மாரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கொள்கிறார்கள்.
இந்தோ பசுபிக் பிராந்திய நிலவரம் மற்றும் பரஸ்பர நலன் குறித்த உலக பிரச்சனைகள் தொடர்பாக குவாட் தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள இந்த மாநாடு நல்ல வாய்ப்பாக அமையும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.