பிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே விற்பனை செய்த பலே கில்லாடிகள்!

0
134

பிரதமர் மோடி அவர்களின் வாரணாசி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து அதனை இணையதளம் மூலமாக விற்க முயற்சி செய்ததாக, 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பிரதமர் மக்களவை தொகுதியான வாரணாசியில் இருக்கின்ற ஜவஹர்நகர் பகுதியில் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலகம் இருந்து வருகின்றது. இந்த கட்டிடத்தை புகைப்படம் எடுத்து இணையதளம் மூலமாக விற்பனை செய்வதற்காக ஓஎல்எக்ஸ்யில் பதிவிட்டு இந்த அலுவலகம் விற்பனைக்கு என்று ஒரு சிலர் பதிவிட்டு இருக்கிறார்கள்.

லக்ஷ்மிகாந்த் ஓஜா என்பவருடைய ஓஎல்எக்ஸ் கணக்கிலிருந்து இவ்வாறு மதிப்பிடப்பட்டிருக்கிறது, மக்கள் தொடர்பு அலுவலகம் என்ற தலைப்பில் விளம்பர பதிவு எண் மற்றும் அதனுடைய சதுர அடி பரப்பளவு மற்றும், குளியல் அறை நான்கு ஓய்வெடுக்கும் அறைகள் என்று அனைத்தும் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கின்றார் அந்த நபர். அதோடு இதன் விலை 7.50 கோடி என விளம்பரம் செய்திருக்கின்றார்.

இதனை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியினர் அளித்த புகாரின் பெயரில், வழக்குப்பதிவு செய்து இந்த விளம்பரத்தை செய்த 4 பேரை காவல்துறையினர், கைது செய்து இருக்கிறார்கள். இதனை அடுத்து ஓஎல்எக்ஸ் நிறுவனம் இந்த பதிவை நீக்கி இருக்கின்றது, கைது செய்யப்பட்டவர்களிடம் எதற்காக இதை செய்தார்கள் என்று விசாரணை நடந்து வருகின்றது, இதனையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக சர்தார் வல்லபாய் படேலின் சிலையை, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை என்று ஓஎல்எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டு அதன் பின்னர் நீக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது