Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் பேச்சு !!

பிரதமர் நரேந்திர மோடி ‘மான்கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை மக்களிடையே பேசி வருகிறார். இன்று 68-வது வானொலி நிகழ்ச்சி உரையாற்றிய நரேந்திர மோடி தமிழ் நாட்டிலே சிறந்து விளங்கும் பொம்மைகள் செய்யும் மையமான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் பற்றி பேசியுள்ளார். விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பொம்மைகள் உருவாக்குவது பற்றி ஒரு பாடமாக கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டதனை அவர் குறிப்பிட்டார். நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணினி மயமாக்குவது குறித்தும் , பழங்கால விளையாட்டுகள் குறித்து ஒரு புதிய டிஜிட்டல் கேமரா உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில் ராஜபாளையம், சிப்பிபாறை போன்ற இந்தியா இனத்தைச் சேர்ந்த நாய்கள் சிறப்பாக பராமரித்து வீட்டில் வளர்க்க வேண்டும் என்று மோடி அறிவுறுத்தினார்.

https://twitter.com/ANI/status/1299950619160010754?s=19
வரும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்க உள்ளதாகவும், செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.மேலும் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Exit mobile version