ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பதினாறாவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சார்ந்த 4 ஆயிரத்து நானூற்று மூன்று வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று வருகிறார்கள். முதல் நாளில் தொடக்கவிழா மட்டுமே நடைபெற்றது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவீனா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரேசிலின் ஒளிவேரியாவை 3க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய வீராங்கனை பவீனா பின்பற்றி காலிறுதிக்குள் நுழைந்தார். இதனை அடுத்து நடைபெற்ற காலிறுதி சுற்றில் உலக தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கின்ற செர்பியாவின் போரிஸ் லாவா வீராங்கனையுடன் விளையாடினார்.
இதில் 3 க்கு 0 என்ற கணக்கில் அவரை விழுத்திய இந்திய வீராங்கனை பதினபடு அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இந்த காலிறுதி ஆட்டத்தில் 18 நிமிடங்களில் 11 5 11 6 11.7 என்ற செட் கணக்கில் அபாரமாக விளையாடிய இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலமாக இந்தியாவிற்கு முதல் பதக்கம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், இன்று காலை நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவின் இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய 16 32 என்ற செட் கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலமாக தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதோடு பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நாளை இறுதி போட்டியில் விளையாடும் வரலாற்று சாதனையையும் பவினா படேல் படைத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், இந்திய வீராங்கனை பவீனா பட்டேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருடைய வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்து பதிவில் வாழ்த்துக்கள் பவினா உங்கள் விளையாட்டு மிகவும் அருமையாக இருந்தது. நானும் நம்முடைய ஒட்டுமொத்த தேசமும் உங்கள் வெற்றிக்காக நாளை பிரார்த்தனை செய்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த தேசம் உங்களுக்கு ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கும் எந்த அழுத்தமும் இல்லாமல் உங்களுடைய மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நீங்கள் நிகழ்த்திய இனிமேல் எழுதப்போகும் சாதனைகள் எல்லாம் நம்முடைய ஒட்டுமொத்த தேசத்தையும் ஊக்கமூட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.