கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே! பா ம க தலைவர் ஜி கே மணி வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

0
137

தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார் தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி வெளியிட்டிருக்கின்றன. ஒரு முகநூல் பதிவில் நேற்று தமிழக சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் ஆரம்பம் ஆனது நேற்றைய தினம் 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்திற்கான வரவு செலவு திட்ட பொது நிதிநிலை அறிக்கை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆல் வாசித்து தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக காகிதம் இல்லாத நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக 14 வருடங்களாக வெளியிடப்பட்டு அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டு வந்த வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தற்சமயம் அரசு நிறைவேற்றி இருக்கிறது. வேளாண்மை மற்றும் ஊரக நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்றைய தினம் தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்மைத்துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஜி கே மணி.

பாட்டாளி மக்கள் கட்சி சென்ற 14 வருட காலமாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தது. அதோடு தன்னுடைய கட்சியின் சார்பாக வெளியிடப்படும் நிழல் நிதிநிலை அறிக்கையில் அதனை தொடர்ச்சியாக குறிப்பிட்டும் வந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும், தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தனியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், இன்று திமுகவின் தலைமையிலான தமிழக அரசு வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறது.

இதன் மூலம் 14 வருட காலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக முன்வைக்கப்பட்டு வந்த ஒரு மிக முக்கிய கோரிக்கை தற்சமயம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது விவசாய பெருங்குடி மக்களும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.