அதிமுக பாமக கூட்டணி முறிவு! உண்மையான காரணம் இதோ!

0
155

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டது.இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. அதோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் பெரும்பாலான வன்னியரின மக்கள் இந்த கூட்டணியை ஆதரித்து வாக்களித்தார்கள்.அதேநேரம் மறுபுறம் ஸ்டாலின் அவர்கள் அதிமுக கூட்டணியிலிருந்து எப்படியாவது பாட்டாளி மக்கள் கட்சியை தன்வசம் இழுத்து விட வேண்டும் என்று பல தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு பார்த்தார். ஆனால் அவருடைய தந்திரம் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சியில் எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதோடு தேர்தல் சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாம் இடம் பெற்றிருக்கக் கூடிய அதிமுக கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கையையும் வைத்தார். அதேசமயம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வன்னியர்களுக்கு என்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டமும் நிறைவேற்றினார்.

அதேநேரம் அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளையும் அதிமுக உடனுக்குடன் நிறைவேற்றி தந்தது. இதனால் அதிமுக செல்வாக்கு பாட்டாளி மக்கள் கட்சி இடம் உயர்ந்து கொண்டே சென்றது.இதனால் அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னரும் தமிழகத்தில் தனி செல்வாக்குடன் இருக்கிறதோ என்ற ஒரு தோற்றம் உருவானது.தற்போது திடீர் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி திடீரென்று அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார் .இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த முடிவானது மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்கள். ஒருபுறம் அப்படி தெரிவித்துக் கொண்டு இருந்தாலும் மறுபுறம் இது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ராஜதந்திர நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் எதிர்வரும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்தால் அது நிச்சயமாக திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இதன் காரணமாக, திமுக எப்படியாவது பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தந்திர நடவடிக்கையின் மூலமாக செயல்பட்டு அதன் வழியாக இந்த கூட்டணி விலகல் நடைபெற்று இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் ஆட்சிக்கு வந்து 4 மாத காலமே ஆட்சி இருக்கின்ற சூழ்நிலையில் இந்த உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கிறது திமுக அப்படி இருக்கும்போது இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்பதே அந்த கட்சி முனைப்பாக இருக்கிறது. ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்தாள் திமுகவின் கனவு பறிப்பது கடினமே ஆகவே திமுக சில தந்திர வேலைகளைச் செய்து பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற வைத்ததாக சொல்கிறார்கள்.

அதேநேரம் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவது தான் நம்முடைய இலக்கு என்று முன்பே தெரிவித்து இருந்தார்.

அதற்கு அச்சாரமாக தான் தற்போது இந்த கூட்டணி விலகல் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் தொடர்ந்தால் நிச்சயமாக எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் அப்படி நடந்தால் அதிமுக முதலமைச்சர் என்ற பொறுப்பிற்கு வந்துவிடும் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தது நடக்காமல் போய்விடும். ஆகவே தான் தற்போது இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் ஒரு சிலர் பேசிக் கொள்கிறார்கள்.