மூன்றாவது ஆண்டாக ஆரவாரமில்லாத தியாகிகள் தினம்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

0
184

கடந்த 1987 ஆம் வருடம் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ஆரம்பமான போராட்டம் ஒரு வார காலம் தொடர்ச்சியாக சாலை மறியல், ரயில் மறியல், உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையை சேர்ந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக, கொல்லப்பட்ட 21 இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் முப்பத்தி நான்காவது ஆண்டு நினைவு நாள் சமூக நீதி நாளாக இன்றைய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வருடம்தோறும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஒன்று தியாகிகளின் தினமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் ஆண்டுதோறும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தியாகிகள் தினம் என்ற பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் ஆனால் வன்னியர் சங்கத் தலைவர் குரு அவர்கள் உயிர் இழந்ததிலிருந்து இந்த தியாகிகள் தினத்தன்று எந்த ஒரு மாநாடும் நடைபெறுவதில்லை.அந்த விதத்தில் இன்றைய தினம் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் 34-வது ஆண்டு விழா சமூகநீதி நாளாக இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி இந்த தியாகிகள் தினத்தன்று தமிழகத்தில் ஏதாவது ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஒரு மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறும். அப்படி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள், என வன்னியர் இனத்தை சார்ந்தவர்கள் அனைவரும் வருகை தந்து இந்த விழாவை சிறப்பிப்பார்கள். அதை விட வன்னியர் சங்க தலைவர் குரு அவர்களின் பேச்சை கேட்பதற்காகவே தமிழகத்திலிருந்து கடைக்கோடி வன்னியன் வரையில் அந்த மாநாட்டிற்கு வருகை தருவது ஆண்டுதோறும் நடைபெறும்.இன்னமும் சொல்லப்போனால் வருகை தரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரே திண்டாடி தான் போவார்கள். ஆனால் வன்னியர் சங்க தலைவர் குரு அவர்களின் ஒரு வார்த்தைக்கு அந்த ஒட்டு மொத்த கூட்டமும் கட்டுப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதேபோல கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் கலந்துகொண்ட மக்களின் கூட்டம் அலை கடலென இருந்தது. அந்த சமயத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த சமூக நீதி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . ஆகவே அங்கே திரண்ட பொதுமக்களின் செல்லிடப்பேசிகளுக்கு அலைவரிசை கொடுக்க முடியாமல் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் திண்டாடிப் போயின அந்த அளவிற்கு இந்த சமூக நீதி மாநாட்டிற்கு தமிழகமெங்கிலும் இருந்தும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.

அப்படி தமிழகமெங்கிலும் இருந்து வருகை தரக்கூடிய பொதுமக்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக அந்த விழா மேடையை அலங்கரிக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் அப்போதைய வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் முன்பாகவே தொடங்கும் இந்த மேடை தயார் செய்யும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பார் வன்னியர் சங்க தலைவர் குரு.அலைகடலென குரலும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும் சத்தத்துடன் பொதுமக்கள் இளைஞர்கள் என்று எழுப்பும் ஒலியை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினருக்கு கூட துணிவு இருக்காது. ஆனால் வன்னியர் சங்க தலைவர் குரு அவர்களின் ஒற்றை வார்த்தை ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் ஒலியை நிறுத்தும் என்றால் அது மிகையாகாது.

இந்த நிலையில், சமூகநீதி நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் உருவ புகைப்படங்களுக்கு பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார்.அதோடு இந்த தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பகுதிகளில் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் மற்றும் அதன் துணை அமைப்புகளையும் சார்பு இயக்கங்களையும் சார்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.