பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, நோய்தொற்று பணியில் ஈடுபட்டு தன்னுடைய உயிரை இழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு தொற்று பாதுகாப்பு பணியில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கும் தலா 25 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை அமல்படுத்துவது போன்ற அரசு உத்தரவுக்கு செவிசாய்த்து அதனை நடைமுறைப்படுத்துவதும் காவல்துறையை சார்ந்தவர்கள் தான். அவர்கள் இது போன்ற வேலைகளை செய்வதால் தான் அவர்கள் எளிதாக இந்த நோய் தொற்றிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். என தெரிவித்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டில் 54காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் உயிர்நீத்த அவர்களின் தியாகம் இணையற்றது. அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படவேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படவேண்டும்!(3/3)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 19, 2021
அத்துடன் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த 54 காவல் துறையை சார்ந்தவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் உயிர் இழந்த அவர்களுடைய தியாகம் ஈடு செய்ய இயலாதது. அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கும் அவர், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எல்லா காவல்துறை அதிகாரிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களை குழந்தைகளின் பெயரில் ரூபாய் 10 லட்சம் வங்கிக் கணக்கில் வைப்பு தொகையாக வைக்கப்படும். என்று அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருக்கும் திட்டம் நாடு முழுவதும் வரவேற்கப்படுவதாக இருக்கிறது. அதனால் அதே போன்ற ஒரு திட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என்பதே தற்போது மாநிலம் முழுவதும் இருக்கின்ற முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆகவே இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மாநிலம் முழுவதும் எழுந்திருக்கிறது.