பாசத்தின் பொருள் மாவீரன் ஜெ.குரு தான்! மருத்துவர் இராமதாஸின் உணர்ச்சி மிகுந்த கவிதை

0
496

பாசத்தின் பொருள் மாவீரன் ஜெ.குரு தான்! மருத்துவர் இராமதாஸின் உணர்ச்சி மிகுந்த கவிதை

மாவீரன் காடுவெட்டி குரு தன் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை வைத்திருந்ததை கவிஞனாக மாறி கவிதையாக வெளிக்காட்டிய பாமக நிறுவனர் இராமதாஸ், தன் கம்பீரமான பேச்சால் வன்னிய இளைஞர்களை தாண்டி மற்ற சமுதாய இளைஞர்களையும் நாடி நரம்புகளை இழுக்க செய்வார் ஜெ.குருநாதன் எனப்படும் காடுவெட்டி ஜெ.குரு, இராமதாஸ் மீது மிகுந்த பாசத்தை காட்டுவார்,

மரணம் ஒன்று தான் அய்யாவிடம் இருந்து என்று அடிக்கடி பொது மேடைகளில் ‌சொல்லி தன் பாசத்தை வெளிகாட்டுவார் மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு,. நுரையீரல் ‌பாதிப்பு காரணமாக ‌அவர் உயிரிழந்தது பாமகவினருக்கு மட்டும் அல்லாமல் தனிப்பட்ட முறையில் மருத்துவர் இராமதாசுக்கும் தான்,

அவர் எழுதிய கவிதை!

பாசத்தின் பொருள் அவன் தான்!

என் அகராதியில் பாசம் என்ற
இடத்தில் அவன் பெயர் தான்!
விசுவாசம் என்பதற்கு வீழாத
எடுத்துக்காட்டு அவன் தான்!!

நான் சார்ந்த விஷயங்களில்…
உண்மை அவன் உடன்பிறவா சகோதரன்!
நேர்மையின் நிழலும் அவன் தான்….
வீரத்தின் விளைநிலமும் அவனே தான்!!

அவனுக்கு நான் ஒருபோதும் எந்த
உத்தரவும் பிறப்பித்ததே கிடையாது!
என் உணர்வை அறிந்து உடனடியாக
செய்து முடிப்பான் எந்த செயலையும்!!

அவன் ஒரு வியாழன்….. அவன் என்னை
சுற்றி வருவதாலேயே நான் சூரியன் ஆனேன்!
அவன் மீது அன்பு காட்டி, அரவணைத்ததாலேயே
அவனுக்கு நான் தாயும், தந்தையுமானேன்!!

இவற்றையெல்லாம் நினைக்கையில்
நெஞ்சமெல்லாம் இனிக்கிறது!
அவனை நேரில் பார்க்க தேடுகிறேன்…
காணவில்லை…. மாவீரா…. எங்கே போனாய்?‌

என்று மாவீரன் மீது உள்ள பாசத்தை கவிதையாக வர்ணித்து உள்ளார்.