Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?

PMK Lawyer K Balu

PMK Lawyer K Balu

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?

 

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் களம் விருவிருப்பாக தொடங்கியுள்ளது, தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக திமுக தலைமைகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்ததுடன், கூட்டணி கட்சிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டன, மேலும் வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது.

 

இந்த சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சாதாரண மக்களிடம் எழுந்துள்ளது, அதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டு ஆளுமைகள் இல்லாத நிலை மேலும் மத்தியில் பாஜக அசுர பலத்துடன் இருக்கும் நிலையில் தேர்தல் நடைபெறுகிறது.

 

பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருப்பதால் வட மாவட்டங்களில் அதிமுக பாமக கூட்டணி, திமுகவிற்கு மிக பெரிய சவாலை கொடுத்து வருகிறது, குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெற்றது, அதே போன்று இந்த முறை நடைபெற வாய்ப்புகள் குறைவு என முன்பே வெளியான கருத்து கணிப்புகள் உறுதி செய்தன.

 

இந்நிலையில் ஜெயங்கொண்டம் தொகுதி பாமாவிற்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டுள்ளார், பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறு நிமிடமே ஜெயங்கொண்டம் பாமகவை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட தொடங்கினர்.

 

இது ஒருபுறம் என்றால் அவர் இன்று தொகுதிக்கு நேரடியாக சென்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் அதிலும், முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை வணங்கி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார், இப்படி பாமக களத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முந்திக்கொண்டு பணியாற்ற தொடங்க இன்று திமுக சார்பில் ksk கண்ணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

களத்தில் தெரிந்த முகம் பாமக அதிமுக கூட்டணி வாக்குகள், மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் மது கடைகளை ஒழிக்க போராடியவர், பல நாடக காதல் வழக்குகளில் பல பெண்களை காப்பாற்றியவர் என்ற அடிப்படையில் தனித்துவம் பெற்று களத்தில் முன்னேறி கொண்டு இருக்கிறார் பாமக பாலு.. தற்போதைய நிலவரப்படி பாமக திமுகவை காட்டிலும் ஜெயங்கொண்டம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

Exit mobile version