பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு

0
204
PMK Lawyer K Balu

பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு

விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த முதியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து உள்ளனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட எதிர்தரப்பினரான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள விளக்கத்தில் இது திட்டமிட்டே செய்யப்பட்ட நாடகம் என்றும்,அவர்களை யாரும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.இதற்கு ஆதாரமாக அப்போது எடுக்கப்பட்ட விடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

அதாவது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் அரசு விதித்துள்ள ஊரடங்கு உத்தரவை மீறி அந்த பகுதியை சேர்ந்த தலித் மக்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்தியதாகவும்,அதற்காக எதிர் தரப்பினர் காவல் துறையில் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தவறை உணர்ந்த தலித் மக்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும்,அதற்காகவே அவர்களாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்திய தங்கள் மீது வழக்கு தொடர்ந்த வன்னிய மக்களை பழி வாங்கும் நோக்கத்தில் திட்டமிட்டே இந்த மன்னிப்பு நாடகம் நடத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதனையடுத்து இந்த சம்பவத்தில் உண்மை நிலையை அறிய பாமகவின் வழக்கறிஞர் பாலு செல்வார் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அவரின் உத்தரவின் படி சமூக நீதி பேரவையின் தலைவரான பாலு இன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

இன்று, திங்கள் காலை 10.00 மணி அளவில் ஒட்டநந்தல் கிராமத்திற்கு செல்கிறேன்! விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தில் அப்பாவி வன்னியர்கள் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டது குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, வழக்கறிஞர்களோடு அந்த கிராமத்திற்கு சென்று கள ஆய்வு நடத்த உள்ளோம்! என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்னவென்று விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது