குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி

0
200

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி

திமுக தத்துவமேதையின் புதல்வரே…. எது Typographical Error ? என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,’’வன்னியர் இனத்திற்காகக் குரல் கொடுத்துப் பாடுபட்ட திரு. இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு கழக ஆட்சி வந்தவுடன் மணிமண்டபம் அமைப்போம் என்ற அந்த உறுதிமொழியை நான் தந்திருக்கிறேன்” என்று கூறினார்.

மறைந்த திரு. இராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு கடலூரில் ஏற்கனவே மணி மண்டபம் அமைக்கப்பட்டு விட்டது. இதை சுட்டிக்காட்டி மருத்துவர் அய்யா அவர்கள் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில்,’’ திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப் போவதாக விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார். இராமசாமி படையாட்சியருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. இந்த உண்மை கூட தெரியாமல் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வன்னியர் தலைவர் குறித்த நிகழ்கால நிலவரம் கூட தெரியாத இவர் தான் வன்னியர் நலனைக் காப்பாற்றப் போகிறாராம். இது தான் காலக் கொடுமை போலிருக்கிறது!” என்று கூறியிருந்தார்.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தி.மு.க கழக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ் . இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், Typographical Error-ஐ எல்லாம் பெரிது படுத்துவதா? என்று வினவியுள்ளார்.

திமுகவில் உள்ள ஒரு சில நல்ல்லவர்களில் டி.கே.எஸ் . இளங்கோவனும் ஒருவர். புத்திசாலியும் கூட. அவருக்கு தெரியாத விஷயங்கள் இல்லை. Typographical Error என்றால் என்ன? என்று அவருக்கு நன்றாக தெரிந்து இருக்கும். விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை ஸ்டாலின் படித்திருக்க வேண்டும். அல்லது ஸ்டாலின் பேசியதை யாரோ தட்டச்சு செய்து பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஸ்டாலின் பேசாத ஒன்று அவரது உரை என்ற பெயரில் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் செய்திக் குறிப்பில் இடம் பெறுகிறது என்றால் அது எப்படி Typographical Error ஆகும். அது திரிக்கப்பட்ட செய்தி அல்லவா?

ஊடகங்களுக்கு திமுக சார்பிலேயே திரிக்கப்பட்ட செய்தி அனுப்பப்பட்டு இருந்தால் உடனடியாக அது குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டாமா?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்பதில் மு-வுக்கும், க-வுக்கும் இடையே புள்ளி விடுபட்டிருந்தால் கூட உடனடியாக திருத்தப்பட்ட செய்திக் குறிப்பு அனுப்பும் திமுக தலைமை, நேற்றிரவு 10.52 மணிக்கு அனுப்பப்பட்ட செய்திக் குறிப்புக்கு இன்று வரை விளக்கம் அளிக்காதது ஏன்? அதை மருத்துவர் அய்யா அவர்கள் சுட்டிக்காட்டிய பிறகு மழுப்பலாக விளக்கம் அளிப்பது ஏன்?

குடியரசு நாளும், விடுதலை நாளும் தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு எல்லாம் நிச்சயமாக தெரியாது என்பதை நாங்கள் மட்டுமல்ல நீங்களும் அறிவீர்கள். அவ்வாறு இருக்கும் போது ஸ்டாலின் செய்த தவறுக்கு நீங்கள் இந்த அளவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டுமா?

டி.கே. சீனிவாசன் திமுகவில் தத்துவமேதை என்று அழைக்கப்பட்டவர். அறிஞர் அண்ணாவின் நண்பர். திமுகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுக்கு நிகரானவர். கலைஞரை விட பல அடுக்கு உயர்ந்த நிலையில் இருந்தவர். அப்படிப்பட்டவரின் புதல்வராகிய டி.கே.எஸ் . இளங்கோவன் ஒரு தத்துபித்துவின் உளறல்களுக்கு விளக்கம் தர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே. இது தான் காலக் கொடுமையோ? என்றும் அவர் அதில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.