தமிழ்நாட்டில் எதிர்வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது இதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடும் அந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மாநில பொருளாளர் திலகபாமா பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு வெற்றிபெறும் முதல் வேட்பாளர் பட்டியலை நாங்கள் வெளியிட்டு சாதனை படித்திருக்கிறோம் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் திலகபாமா.
அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம், அடுத்தவர்கள் எங்களால் பயன் அடைந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை அதிமுகவினர் பாமகவிற்கு துரோகம் செய்துவிட்டார்கள் என கடந்த தேர்தலில் தெரிந்தது.
இதன் காரணமாக, நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம் என்று கூறியிருக்கின்றார். இதன் காரணமாக, நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என தெரிவித்திருக்கிறார்.
தனித்து போட்டியிட்டு எங்களுடைய செல்வாக்கை நாங்கள் சுயபரிசோதனை செய்யவிருக்கின்றோம் பாட்டாளி மக்கள் கட்சி மக்களுக்கு எப்போதும் சேவை செய்யும் கட்சி, அந்த சேவை தொடர்வதற்கு திண்டுக்கல் மாநகராட்சியை முதல் மாநகராட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 48 வார்டுகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறியிருக்கிறார்.