Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள்

Surya vs Anbumani Ramadoss

Surya vs Anbumani Ramadoss

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள்

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.திரைப்படத்தில் பேசப்பட்ட விவகாரம் மற்றும் இயக்குனர் இந்த கதையை படமாக்கிய விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதால் பல தரப்பு பாராட்டையும் பெற்று வருகிறது.

அதே நேரத்தில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்த இந்த கதையில் எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத வன்னியர் சமுதாயத்தை கொலையாளியுடன் அடையாளப்படுத்தி காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆரம்பத்தில் வன்னியர் சங்க காலண்டரை கொலையாளியின் வீட்டில் இருப்பது போல காட்டியது தவறு என வன்னிய சமுதாய இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்க உடனடியாக படக்குழு அதை மாற்றி அமைத்தது.

அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுத, அதற்கு சூர்யா திமிராக ஒரு பதில் அளிக்க என விவகாரம் வேற லெவலில் மாறியது.அரசியல்வாதிகள்,திரைத்துறை மற்றும் ஊடகம் என அனைத்து தரப்பிலும் இது கருத்து சுதந்திரம் என ஜெய் பீம் படக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் இயக்குனர் பாரதிராஜாவுக்கு தேவர் படத்தை வைக்கலாமா என பதில் கடிதம் எழுதியதும் அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திரைத்துறையினர் சாதிய வன்மத்துடன் தான் செயல்படுகின்றனர் என்பதை பாரதிராஜாவின் இந்த மௌனம் மக்களுக்கு எளிதாக உணர்த்தியது.

இந்நிலையில் சூர்யா தரப்பு வன்னியர்களுக்கு எதிராகவும்,பாமகவுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து டிரெண்டிங் செய்தனர்.இதனையடுத்து மேலும் கோபமடைந்த வன்னிய சமுதாயத்தினரும்,பாமகவினரும் சூர்யாவையும் அவரை ஆதரித்த நபர்களையும் எதிர்த்து டிரெண்டிங் செய்து தேசிய அளவில் இந்த விவகாரத்தை பேச வைத்தனர்.இந்நிலையில் நிலைமையை உணர்ந்த இயக்குனர் உடனடியாக வருத்தம் தெரிவித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து படிக்க: தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு

இயக்குனர் வருத்தம் தெரிவிப்பது கால தாமதமான செயல் என்றும்,அதில் சூர்யாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளது உண்மையெனில் அன்புமணி ராமதாசுக்கு எழுதிய பதிலில் இதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.பிரச்சனை தேசிய அளவில் செல்வதும்,ஆரம்பத்தில் இருந்த ஆதரவு தனக்கு இல்லை என்று தெரிந்தும் சூர்யா தரப்பு இறங்கி வந்து இயக்குனரை அறிக்கை விட வைத்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் என்ன அறிக்கை விட்டாலும் இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா வன்னிய சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்கும் வரையில் விட மாட்டோம் என வன்னிய சமுதாய மக்கள் தொடர்ந்து அவருக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் சூர்யா,ஜோதிகா மற்றும் அவரது தம்பி கார்த்திக் என யாருடைய படமும் தியேட்டர்களில் வெளியாக விட மாட்டோம் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவுக்கு எதிரான இந்த ஜெய் பீம் விவகாரம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.ட்விட்டரில் #SuriyaStopVanniyarHate மற்றும் #StopVanniyarHateNow என்ற டேக்குகளில் சூர்யாவுக்கு எதிராக பதிவிடும் கருத்துக்கள் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

 

 

இயக்குனர் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டால் முடிந்து விடும் என்ற பிரச்சனை மன்னிப்பு கேட்கும் வரை முடியாது என நீண்டு கொண்டே செல்வது சூர்யா தரப்புக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version