Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அன்புமணி ராமதாஸிடம் விவாதிக்கும் முன் என்னிடம் விவாதிக்க தயாரா? திமுக எம்பிக்கு சவால் விடும் பாமக நிர்வாகி

அன்புமணி ராமதாஸிடம் விவாதிக்கும் முன் என்னிடம் விவாதிக்க தயாரா? திமுக எம்பிக்கு சவால் விடும் பாமக நிர்வாகி

பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குடியரசுத் தலைவரும் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த மசோதாவானது தற்போது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக ஆதரவாக வாக்களிதுள்ளது.

அதாவது குறிப்பாக மக்களவையில் அதிமுகவின் ஒரு எம்பியும், மாநிலங்களவையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாமக உள்ளிட்ட கட்சிகளின் 11 எம்பிக்களும் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். இதனையடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் என தொடர்ந்து எழுந்து வருகின்றன. மேலும் பல இடங்களில் எதிர்க் கட்சிகள் போராட்டங்களும் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் “அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக நிறுவனர் ” ஈழத் தமிழர்கள் குறித்து திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்” என திமுகவை கடுமையாக சாடியிருந்தார். மேலும் இது குறித்து பொது வெளியில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்றும் சவால் விட்டிருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எந்த பதிலும் கூறாமல் வழக்கம் போல திமுக கழக நிர்வாகி ஒருவரான ஜே.அன்பழகன் எம்.எல்.ஏ வை விட்டு பதிலளிக்க வைத்தார்.

இதே போல நேற்று பாமக இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ஈழத் தமிழர்களுக்கு எதிராக திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டு இது குறித்து ஸ்டாலின் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்றும் சவால் விட்டிருந்தார். தற்போது இதற்கும் அவர் பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

ஆனால் வழக்கம் போல இதற்கு தருமபுரி எம்பி. செந்தில்குமார் அன்புமணியுடன் விவாதிக்க நான் தயார் என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்க அரசியல்களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இவ்வாறு பாமக சவால் விடுவது ஒருவருக்கும் அதற்கு திமுக சார்பாக முட்டு கொடுப்பது ஒருவரும் என இழுத்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தான் திடீர் திருப்பமாக தருமபுரி தொகுதியின் திமுக எம்பி செந்தில்குமாருடன் விவாதிக்க நான் தயார் என பாமக நிர்வாகி ஒருவர் சவால் விட்டிருக்கிறார். கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் தான் திமுக எம்பிக்கு சவால் விட்டிருக்கிறார். இவர் தற்போது பாமகவின் இளைஞர் அணி துணைச்செயலாளர் பதவி வகித்து வருகிறார்.

மேலும் அவர் தான் வசிக்கும் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகளுக்கு கட்சி நிர்வாகியாகவும் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் என்ற முறையிலும் தொடர்ந்து போராடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் திமுக எம்பியுடன் தான் விவாதம் செய்ய தயார் என்று சவால் விட்டிருக்கிறார். இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது.

https://twitter.com/AshokSrinithi/status/1207618722824769536?s=19

ஒவ்வொரு முறையும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக முட்டு கொடுத்து கொண்டிருந்த கழக நிர்வாகிகளுக்கு பாமக நிர்வாகி ஒருவர் சவால் விட்டிருப்பது தர்ம சங்கடத்தை உண்டாக்கியுள்ளது.பாமக நிர்வாகியின் சவாலை திமுக எம்பி. செந்தில்குமார் ஏற்று விவாதத்தில் கலந்து கொள்வாரா? இல்லை இதற்கு முட்டு கொடுக்க வேறு ஒரு கழக நிர்வாகி கிளம்பி வருவரா? என்று மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க : ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

Exit mobile version