பாஜக விற்கு ஆதரவாக இருக்கும் மூன்று சட்டசபை உறுப்பினர்கள்! கடும் அதிர்ச்சியில் திமுக!

0
128

புதுச்சேரி மாநிலத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை உறுப்பினர்கள் ௩௦ மத்திய அரசு நியமனம் செய்தது மூன்று சட்டசபை உறுப்பினர்கள் மொத்தமாக 33 சட்டசபைஉறுப்பினர்கள் இருக்கிறார்கள். 30 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் ஒன்றிணைத்து நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, போன்ற கட்சிகளும் ஒரே கூட்டணியாக போட்டியிட்டது. அதே போல என் ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை அதிமுக போன்ற கட்சிகள் மற்றொரு கூட்டணியாக போட்டியிட்டது. இதில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அதே சமயம் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இருந்தாலும் அமைச்சரவை பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில். பாரதிய ஜனதா கட்சிக்கு இன்னும் இரண்டு சுயச்சை சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த காரணத்தால், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்களின் பலம் 11 ஆக அதிகரித்திருக்கிறது. தற்சமயம் திருபுவனை சட்டசபை உறுப்பினர் அங்காளன் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் பலம் 12 ஆக அதிகரித்திருக்கிறது. புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 சட்டசபை உறுப்பினர்கள் பெயரை இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினர் பலம் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.