Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம்.!!

கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம் வரலாற்றில் இன்று அனுசரிக்கப்படுகிறது.

1927 ஆம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தவர் தான் கவிஞர் கண்ணதாசன்.

இவரது இயற்பெயர் முத்தையா கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

இவருக்கு வணங்காமுடி காரை முத்துப் புலவர் கமகப்பிரியா ஆரோக்கியசாமி என்ற பட்டப் பெயர்களால் அழைக்கப்படும் இவர் பாண்டிமாதேவி இயேசுகாவியம் உள்ளிட்ட காப்பியங்களை இயற்றியுள்ளார் மேலும் அம்பிகை அழகு தரிசனம் தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்களிலும இயற்றியுள்ளார்

அதுமட்டுமல்லாமல் பராசக்தி கருப்புபணம் சூரியகாந்தி ரத்தத்திலகம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் தன்னுடைய எளிமையான வழிகள் மூலமாக மக்களை கவர்ந்த கவியரசர் கண்ணதாசன் 1981ஆம் ஆண்டு தனது 54 வயதில் அக்டோபர் 17ஆம் தேதி மறைந்தார் அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Exit mobile version