Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எம்ஜிஆரின் நண்பர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி!

Poet pulavar pulamaipithan passed away

Poet pulavar pulamaipithan passed away

எம்ஜிஆரின் நண்பர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி!

புலமைப்பித்தன் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.இவர் கோவையில் பிறந்தவர்.பாடல் வரிகளுக்காக நான்கு முறை தமிழக அரசின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.2001ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு பெரியார் விருது வழங்கி பெருமை செய்தது.பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் முன்னாள் சட்டசபை துணை தலைவருமான புலமைப்பித்தன் 1968ஆம் ஆண்டு நடிகர் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானவர்.

தொடர்ந்து நடிகர்கள் சிவாஜி,ரஜினி,கமல் மேலும் தற்போதைய விஜய்,ஜெயம் ரவி வரை ஏராளமான திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார்.முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார் புலமைப்பித்தன்.சட்டமன்ற உறுப்பினர் குழுவில் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார் இவர்.வயது மூப்பின் காரணமாக இவர் சமீபத்தில் உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள சாந்தி மருத்துவமனையில் புலமைப்பித்தன் சிகிச்சை பெற்று வந்தார்.இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவருக்கு வயது 85.முன்னதாக மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக இவர் அவதிப்பட்டு வந்தார்.உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்து விட்டார்.மேலும் அவரது உடல் தனது நீலாங்கரை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

நான்கு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை இவர் பெற்றுள்ளார்.மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் படங்களுக்கு இவர் நிறைய பாடல்களை எழுதியுள்ளார்.அதில் ஆயிரம் நிலவே வா,நான் யார் நான் யார் பாடல்கள் குறிப்பிடத்தக்கது.இவரின் இறப்புக்கு தமிழ் திரையுலகினரும் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Exit mobile version