என்னுடைய பாட்டுக்கு விருப்பம் இல்லாமல் வரிகளை எழுதிய கவிஞர் வாலி!! வாழ்வின் ஆரம்பமே அது தான்!!

0
91
poet-vali-who-wrote-lyrics-for-my-song-without-liking-that-is-the-beginning-of-life

தேவநேசன் சொக்கலிங்கம் என்கின்ற தேவா அவர்கள் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி பாடகரும் ஆவார். இவர் இதுவரை 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ் , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்குப் பாடல்கள் இயற்றி பின்னணி இசையும் வழங்கியுள்ளார் . 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, தேவா தூர்தர்ஷன் பொதிகை சேனலில் சில காலம் பணிபுரிந்தார் மற்றும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்கு பாடல்களை இயற்றி இருக்கிறார்.அவரது முதல் படமான மனசுக்கேத்த மகராசா 1989 இல் வெளியானது. பின்னர் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் பணியாற்ற அவருக்கு அழைப்பு வந்தது . வைகாசி பொறந்தாச்சு படத்துக்குப் பிறகு அவர் பெயர் தமிழ்ச் சமூகம் முழுவதும் அறியப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவரை “தேனிசை தென்றல்” என்று அன்போடு அழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமா துறையில் இசையமைப்பாளராக தற்பொழுது ஆட்சி செய்து கொண்டிருக்கும் தேவா அவர்கள் தன்னுடைய ஆரம்ப காலகட்டம் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவற்றை இங்கு காண்போம்.

முதன் முதலில் இவர் பாட்டு இசைக்கும் பொழுது அந்தப் பாடலுக்கு வரிகளை எழுத வாலி அவர்கள் வந்திருக்கிறார். ஆனால் கவிஞர் வாலி அவர்கள் தேவாவை கண்டு சரியாக பேசாமல் சென்று விட்டாராம். அதன் பின் தேவா அவர்கள் தன்னுடைய இசையை இசைத்து காட்டிய பொழுது, இந்த பாடல் நன்றாக இருக்கிறது என்று கூறி அதற்கான வரிகளை எழுதிக் கொடுத்துள்ளார் கவிஞர் வாழியவர்கள்.

இதுகுறித்து கூறும் பொழுது இசையமைப்பாளர் தேவா அவர்கள், ” ஆரம்பம் நல்லா இருக்கு வயல் எல்லாம் நல்லா இருக்கு” என்ற பாடலை தன்னுடைய சினிமா துறை வாழ்க்கையில் துவங்கி வைத்தவரே கவிஞர் வாழியவர்கள் தான் என்று மகிழ்வோடு தெரிவித்திருக்கிறார்.