ரிமோட் வென்டிலேட்டரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

0
98

கொரோனாவில் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர்கள் எனப்படும் சுவாச கருவிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் கோர பிடியில் கடைசிக் கட்டத்திலிருக்கும் நோயாளிகள் பிழைப்பதும் இறப்பதும் வெண்டிலேட்டர் வசமே உள்ளது.

ஒரு மனிதன் சராசரியாக சுவாசிக்கும் பிராணவாயுவின் அளவு குறையும் போதும், அவரது உடலுக்கு தேவையான பிராணவாயுவை செலுத்தி அவரை உயிருடன் வைத்திருக்க வெண்டிலேட்டரின் உதவி தேவைப்படுகிறது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கொரோனாவிற்க்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவ பணியாளர்களே கொரோனவால் பாதிக்கப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது. இதற்க்கு காரணம் கொரோனா தொற்று உச்சத்திலிருக்கும் நோயாளிக்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சிகிச்சையளித்தாலும் அது அவர்களுக்கு ஆபத்தில் முடிவது தான் காரணம்.

இந்த நிலையில் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ‘ரெஸ்பிசேவ்’ எனும் ரிமோட் வெண்டிலேட்டரை போலந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கருவி மூலம் நோய்த் தொற்று உச்சத்திலிருக்கும் நோயாளிகள் அருகில் செல்லாமலேயே மருத்துவர்களால் அவர்களை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கருவி நோயாளிகளை மட்டுமல்லாது மருத்துவ பணியாளர்களையும் தொற்றிலிருந்து காக்கும் என கூறுகின்றனர். இதை லெஸ்செக் கோவலிக் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கருவியின் மூலம் மருத்துவக்ரள் தங்கள் அலைபேசியில் ஓர் செயலியை தரவிறக்கம் செய்வதன் மூலம் கண்காணிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

ரெஸ்பிசேவ், ஒரு வழக்கமான வென்டிலேட்டரை விட குறைவான விலையில் கிடைக்கும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சில மாதங்களில் உலக சந்தைக்கு வரும் என்கிறார்கள்.