சேலத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை! கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்!

0
180
Police action in Salem! Co-operative workers suspended!

சேலத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை! கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்!

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த தேவியாக்குறிச்சி ஊராட்சி தலைவராக பதவி வகித்து வந்தவர் அமுதா. இவருடைய கணவர் ஜெயக்குமார் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முதல் நிலை எழுத்தளாராக பணிப்புரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஊராட்சியில் ஒப்பந்த பணி மேற்கொள்ளும் பணி செய்யும் காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் ஒப்பந்த பணிக்கு ரூ55 ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கியுள்ளதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் அமுதா மற்றும் அவருடைய கணவர் ஜெயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.மேலும் ஊராட்சி செயலாளர் சின்னசாமி பணி இடை நீக்கம் செய்யப்பட்டது.