Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொள்ளைக்காரன் பிடிபட்டான்: போலீசாருக்கு பாராட்டுகள்!

வேளச்சேரியில், வீடு புகுந்து கொள்ளையடித்து வந்தவரை போலீசார் அதிரடியாக பிடித்தனர். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

சென்னை: வேளச்சேரி, தண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் பாலாஜி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய், திருடப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையிலான, தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

அதன்பேரில் வேளச்சேரி, ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த பிரபு (வயது36) என்பவரை கைது செய்தனர். விசாரணையின் போது அவரிடம் இருந்து பல வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட 40 சவரன் நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள், எல்.இ.டி., டிவி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கொள்ளையன் பிரபுவை கைது செய்த போலீசாரை பாராட்டி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று சான்றிழ் வழங்கினார்.

Exit mobile version