Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுத்தி சுத்தி அடிக்கும் காவல்துறையினர்…! விழிபிதுங்கும் பாஜகவினர்…!

திருமாவளவன் பெண்களை பற்றி அவதூறாக பேசி இதற்கு எதிராக நடக்கவிருந்த போராட்டத்திற்கு கிளம்பிய கே டி ராகவன் அவர்களை மதுராந்தகம் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் அதுபோல பாரதிய ஜனதாவிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் இதை அறிந்த போலீசார் போராட்டங்களுக்கு தடை விதித்தனர் ஆனாலும் தடையை மீறி பாஜகவில் உள்ளவர்கள் சிதம்பரத்தில் ஒன்று திரண்டனர்

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூரில் குவிய காவல்துறையினர் அவர்களை கைது செய்தார்கள் அசம்பாவிதம் எதுவும் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கைது நடைபெற்றது என்று போலீசார் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் சிதம்பரத்தில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை முட்டுக்காடு அருகில் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள் அதேபோல மதுராந்தகம் செங்கல்பட்டு ஆத்தூர் சுங்கச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார் அச்சரப்பாக்கம் காவல்துறையினர் அவரை கைது செய்து போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்து இருக்கிறார்கள்.

Exit mobile version