Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கத்தியை காட்டி போலீசாரை மிரட்டிய பெண்! பின்னர் நடந்த அதிரடி சம்பவம்! – வைரல் வீடியோ

கத்தியை காட்டி போலீசாரை மிரட்டிய பெண்! பின்னர் நடந்த அதிரடி சம்பவம்! – வைரல் வீடியோ

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்திரபிரதேச பெண் சாமியார் ஒருவர் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதாக கூறி காவல்துறையினருக்கு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலகில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, சைனா, வடகொரியா போன்ற நாடுகளே கொரோனா தொற்று அபாயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. ஒவ்வொரு நாளும் உயிர் பலியும், கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் மட்டும் 564 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் மதுரையில் ஒரு நபர் இறப்பு உட்பட இந்தியாவில் 10 பேர் இறந்துள்ளனர். அத்தியாவசிய தேவையற்ற காரணங்களை தவிர்த்து எதற்காகவும் வெளியே வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை மீறியும் சிலர் வெளியில் சுற்றுவதால் காவல்துறையினரின் அபராதம் மற்றும் நூதன தண்டனைக்கு ஆளாகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் மக்கள் அதிகம் கூடும் வணிக கட்டிடங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மதுக்கடைகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் உட்பட மக்கள் தேவையற்று கூடும் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவும் என்பதால் தமிழக தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மளிகை கடைகள், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய கடைகள் திறந்திருக்காலம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தின் தியோரியா பகுதியில் “மா ஆதி சக்தி’ என்ற ஆன்மீக ஆசிரமத்தை பெண் சாமியார் ஒருவர் நடத்தி வருகிறார். இன்று காலை தனது பக்தர்கள் உட்பட 50 – க்கும் மேற்பட்டோரை வீட்டில் சேர்த்துக் கொண்டு பூசை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து பேச்சு வார்த்தை நடத்தியபோது பெண் சாமியார் கத்தியை காட்டி காவல்துறையினரை மிரட்டல் விடுப்பது போல் பேசினார்.

https://twitter.com/alok_pandey/status/1242733660693917701?s=19

இதையடுத்து, அதிரடியில் இறங்கிய போலீசார் அங்கிருந்த கூட்டத்தை கலைத்து பெண் சாமியாரை கைது செய்து ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version