Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பைக்கை பார்த்ததும் ஒரு ரவுண்ட் தரீங்களா? என்று கேட்ட போலீஸார்!

பைக்குகளின் மீது மோகம் இல்லாத இளைஞர்கள் மற்றும் ஆண்களையே பார்க்க முடியாது.விதவிதமாக சந்தைக்கு வரும் பைக்குகளை வாங்கி அதனை ஓட்டுவதில் இருக்கும் சந்தோஷம் ஆண்களுக்கு வேறு எதுவும் கிடையாது.

அப்படி ஒரு பைக்கை பார்த்ததும் போலீசார் எனக்கு ஒரு ரவுண்ட் தர முடியுமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த பைக் உள்ளது என்பது தான் இந்த பதிவு.

இந்தியாவில் பல லட்சம் ரூபாய் அளவிற்கு கூட பைக்குகள் இருக்கின்றன. அது ஏழைகளுக்கு எப்பொழுதும் எட்டாத கனியாகவே இருக்கின்றன. அப்படி தனக்குப் பிடித்த பைக்கை பார்த்ததும் ஒரு ரவுண்டு தரமுடியுமா என்று தனது ஆசையை கூறி அதில் ஒரு ரவுண்டு போய் வந்திருக்கிறார் இந்த போலீசார்.

போலீஸ்காரர் ஓட்ட ஆசைப்பட்டது கவாஸாகி இசட்900 சூப்பர் பைக்காகும். மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.கொரோனா அச்சுறுத்தலில் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கொண்டிருக்கும் பொழுது இந்த பைக்கை போலீஸ் பார்த்து தனது ஆசையை கூறி அதில் ஒரு பயணமும் செய்திருக்கிறார்.

சூப்பர் பைக் இந்தியாவில் ரூ. 8,34,000 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.இது டுகாட்டி மான்ஸ்டர் 797 மற்றும் டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆகிய சூப்பர் பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கின்றது.

 

Exit mobile version