உதகையில் பாஜகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை – வலுத்த போராட்டம்!
வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமமுக, மதிமுக, பாமக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் கூட்டிகிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த நிலையில் நீலகிரி தொகுதியில் நீலகிரியில் மத்தியில் இணைஅமைச்சரும் தேசிய செயலாளருமான எல்.முருகன் போடடியிடவுள்ளார்.
நீலகிரி தொகுதியில் போட்டியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய,எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர், அதேசமயம் அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய தொண்டர்களுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களை கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது.
இதனை கண்டித்து அண்ணாமலை முந்நிலையில் பாஜகவினர் உதகை காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய கோரி போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் உதகை காவல்துறை அதிகாரிகள் அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பாஜக தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.