Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் மோடி பாராட்டிய மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் கந்து வட்டி புகாரில் தலைமறைவு

Police case Against Madurai Salon Shop Owner Mohan

Police case Against Madurai Salon Shop Owner Mohan

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக பொதுமக்கள் பெரும்பாலோனோர் அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்கப் பெறாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் சேமிப்பு பணத்தை அருகில்  இருந்த ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி நாடு முழுவதும் பிரபலமானார்.
இதனையடுத்து தேசிய அளவில் இவர்களது குடும்பம் பிரபலமானது. குறிப்பாக பிரதமர் மோடி கூட டெல்லியில் இருந்து இவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். கடந்த மே மாதம் நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் இவர்களின் சேவையை பாராட்டி பேசியுள்ளார். இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தொலைபேசியில் இவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனையடுத்து சலூன்கடைக்காரர் மோகன் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதாக அறிவித்தார்.
Police case Against Madurai Salon Shop Owner Mohan1
Police case Against Madurai Salon Shop Owner Mohan1

இதில் திடீர் திருப்பமாக இவர் மீது கந்துவட்டி புகார் எழுந்துள்ளது. இவ்வாறு கந்துவட்டி புகார் எழுந்ததைத் தொடர்ந்து சலூன்கடைக்காரர் மோகன் தலைமறைவாகியுள்ளார்.

மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் தான் சலூன் கடைக்காரர் மோகன்.  இவரிடம் மதுரை அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவரான செங்கை ராஜன் என்பவர் மருத்துவச் செலவுக்காக 30 ஆயிரம் ரூபாயை  கடனாக வாங்கியுள்ளார்.  இதனையடுத்து அந்தப் பணத்தை செங்கை ராஜன் அவரிடம்  திருப்பி  செலுத்தியுள்ளார்.

இவ்வாறு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திய  நிலையிலும் மேலும் அதிக வட்டி கேட்டு  சலூன் கடைக்காரர் மோகன் செங்கை ராஜனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக  குறிப்பிடுகிறது.  இதனையடுத்து இதுகுறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில்  சலூன் கடைக்காரர்  மோகன் மீது செங்கை ராஜன் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவ்வாறு தன் மீது கந்துவட்டி புகார் எழுந்ததையடுத்து தற்போது சலூன் கடைக்காரர் மோகன் தலைமறைவாகியுள்ளார்.

Exit mobile version