காபியால் கையும் களவுமாக மாட்டிய போலீஸ்! தொடர்ந்து அரங்கேறும் காவல் அதிகாரிகளின் அராஜகம்!
நாளுக்குநாள் போலீசாரின் அரஜாகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது. அந்தவகையில் போலீசார் சாதாரண மக்களிடம் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.கொரோனா காலக்கட்டத்தில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு கடைகள் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.அந்தவகையில் சில வாரங்களுக்கு முன் தான் கோவையில் அரசு கூறிய நேரத்திற்கு மேலாக கடையை நடத்தியதால் கடை உரிமையாளரிடம் கட்டுப்பாடுகளை எடுத்துக்கூறாமல் சட்டென்று கடை உரிமையாளர் பெண்ணை லத்தியால் அடித்து தாக்கினர்.
அதற்கடுத்து காஞ்சிபுரம் ஹோட்டலில் காவல் அதிகாரி ப்ரீ குழம்பு கேட்டுள்ளார்.அந்த கடை உரிமையாளர் தர மறுத்துள்ளார்.இதனால் அக்கடைக்கு அடுத்த நாள் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என ரூ.5000 அபராதம் செலுத்துமாறு கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இவர்கள் வழியே தற்போது சென்னை தி நகர் பகுதியில் கிருஷ்ணா டெலி காபி என்ற பெயரில்,செந்தில் என்பர் காபியை குறைந்த விலையான ரூ.10 க்கு விற்று வந்துள்ளார்.
அப்பகுதியில் இவர் கடையை போலவே போட்டியாக மூன்று நான்கு கடைகள் உள்ளது.ஆனால் இவர் கடைக்கு மட்டும் தம் மக்கள் கூட்டம் அலைமோதும்.ஏனென்றால் இவர் மட்டும் தான் அப்பகுதியில் மிகுந்த குறைந்த விலைக்கு காபி விற்று வருகிறார்.செந்தில் கடைக்கு அதிக அளவு கூட்டம் வருவதால் மற்ற கடைகளுக்கு வருமானம் மிகவும் குறைவாகவே காணப்படும்.
அதனால் மற்ற கடை உரிமையாளர்கள் அப்பகுதி போக்குவரத்துக்கு கண்காணிப்பு அதிகாரியை தன் வசம் வைத்துக்கொண்டு,அன்றாடம் செந்தில் வைத்துள்ள கடைக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்கள்.கடையில் ஏன் இவ்வளவு பல்ப்புகள் எரிகிறது என்றும்,மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்தாலும் சரியா பின்பற்றுவது இல்லை என தினத்தோறும் செந்தில் கடையை மட்டும் குறிக்கோளாக குற்றம் சாட்டி வந்துள்ளார்.
ஆனால் நேற்று இதனையெல்லாம் தாண்டி எல்லை மீறி போகும் நிலை ஆனது.செந்தில் தனது கடை முன்பு யாருக்கும் இடையூர் தராத வகையில் அவர் கடை பெயர் போட்ட போர்ட் ஒன்று வைத்துள்ளார்.அங்கு வந்த போக்குவரத்து காவல் துறை அதிகாரி அந்த போர்டை சாலையின் முன் அவரே எடுத்து வைத்து இது மக்களுக்கு இடையூர் தரும் நோக்கில் உள்ளது என்று அதனை புகைப்படம் எடுத்து அபராதம் கட்டு என கூறினார்.அதுமட்டுமல்லாமல் குறைந்த விலையென்று பொய் வார்த்தைகளை கூறி மக்களிடம் விமர்சிக்கிறாய்,உன்னை யார் 10 ரூபாய்க்கு காபி விற்க சொன்னது என போக்குவரத்து காவல் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு கடை உரிமையாளர் இது என் கடை நான் எந்த விலையில் விற்க வேண்டுமென்று நான் தான் முடிவு எடுப்பேன் என்றார். அதன்பின் கடையிலிருந்த வாடிக்கையாளர்கள் போக்குவரத்து போலீசை எதிர்த்து கேள்வி கேட்கவே மீண்டும் அந்த போர்ட் இருந்த இடத்திலேயே அவர் கொண்டு வந்து வைத்தார்.இச்சமபவங்கள் அனைத்தும் அவர் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பாதிவாகியுள்ளது.இதுகுறித்து காவல் நிலையத்தில் போக்குவரத்து போலீசார் மீது கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.