தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்!

Photo of author

By Rupa

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்!

திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கூடம்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வாரிய வசதி குடுயிருப்பு பகுதியில் வசித்து வருபவர்  பிரசாந்த். இவர் அந்த பகுதயில் பல நாட்களாக கஞ்சா விற்று வந்துள்ளார். இந்நிலையில், அந்த பகுதியில் இருக்கும் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டியிருந்தனர்.கண்காணிப்பில் இருந்த போலீசாரைக் கண்டு பிரசாந்த் தான் கையில் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடிக்க தொடங்கினார்.

சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அந்த விசாரணையில் 150 கிராம் கொண்ட கஞ்சாவை சட்ட விரோதமாக பொதுமக்கள் இடையே விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர் வைத்திருந்த கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் கைப்பற்றினர்.அவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.போலீசார் செய்த இந்த செயல் திரைப்பட பாணியில் இருந்தாலும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Exit mobile version