Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூர்யா ரசிகர்களின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கல்விமுறையில் உள்ள நீட் தேர்வை குறித்து சூர்யா முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சை ஆகவும் பேசு பொருளாகவும் தமிழகத்தில் நிலவி வருகிறது. நடிகர் சூர்யா மாணவர்கள் தொடரும் தற்கொலை தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நீட் தேர்வு குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார் செய்திருந்தார்.

சூர்யா கலந்து கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டிலிருக்கும் கல்வி முறை, மாணவர்களின் பாடங்கள், தேர்வுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சூழ்நிலையில் சமீபத்தில் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருந்தபோதிலும் சூர்யாவுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள், நடிகரின் ரசிகர்கள் கருத்துக்களை கூறினார்கள்.இந்த நிலையில் சூர்யாக்கு ஆதரவாக தென்காசி மாவட்டத்திலுள்ள சூர்யாவின் ரசிகர்கள் அனல் தெறிக்க பறக்கும் வசனங்களுடன் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.சூர்யாவின் ரசிகர்கள் மாவட்டம் முழுவதும் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

இந்தப் போஸ்டர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரின் கவனத்தையும் ஈர்த்தது.இந்த போஸ்டரில் உள்ள வசனங்கள் அரசை குறிப்பிடும் வகையில் உள்ளது என குறிப்பிட்ட போலீசார் சம்பந்தப்பட்ட சூர்யா ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version