அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்கப் போகும் போலீஸ்.. கொந்தளிக்கும் அதிமுக நிர்வாகிகள்!! வாய்திறக்காத பாஜக!!

0
345

அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களை பொது மேடையில் தரக்குறைவாக பேசிய அண்ணாமலை அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளனர்.

முஸ்தப்பா முஸ்தப்பா என்ற நண்பர்களின் பாடலை போல தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக அதிமுக கட்சியும் பாஜக கட்சியும் நண்பர்காளக இருந்தனர். கூட்டணி வைத்து 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தது.

இருப்பினும் இரண்டு தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு தோல்வியும் மட்டுமே பரிசாக கிடைத்தது. இதையடுத்து இந்த வருடம் அதாவது 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கூட்டணி தொடர்பாக அதிமுக பாஜக கட்சிகளுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட அதிமுக கட்சியும் சரி பாஜக கட்சியும் சரி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களும் ஒருவருக் கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் “பொய் மட்டும் பேசும் அண்ணாமலை அவர்களுக்கு எப்படியோ கட்சித் தலைவர் பதவி கிடைத்துவிட்டது. ரொம்பத்தான் ஆடுகிறார்” என்று விமர்சனம் செய்தார். இவரின் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேடையில் பேசிய அண்ணாமலை அவர்கள் “யாரோ ஒருவருடைய காலில் விழுந்து பதவியை பெற்ற தற்குறி எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னை பற்றி பேச தகுதியே இல்லை.

அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி எல்லாம் பேசக்கூடாது” என்று விமர்சனம் செய்தார்.

இவருடைய இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் களிம்பியுள்ள நிலையில் அதிமுக கட்சியினர் அண்ணாமலை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை குறித்து அவதூறாக பேசியதாக அண்ணாமலை மீது அதிமுக கட்சியின் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் சரவணன் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் “முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அவரை அசிங்கப்படுத்தும் விதமாகவும் பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசி இருக்கிறார். மேலும் இவருடைய இந்த பேச்சால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். பொது அமைதி சீர்குலையும்.

அசிங்கப்படுத்தும் விதமாக நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து எங்கள் கட்சியை பற்றியும் கட்சி பொதுச்செயலாளரையும் அவதூறாக பேசி வருகிறார். இதனால் அண்ணாமலை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை அவர்கள் பேசியதற்கு அதிமுக கட்சியினர் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தியும் உருவ பொம்மை எரித்துக் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலை அவர்கள் அரசியல் தொடர்பான மேற்படிப்புக்காக லண்டன் பயணம் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.