Cybercrime: பகுதி நேர வேலை என்ற பெயரில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் ஆன்லைன் பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் வழியாக தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் பண ஆசையை உண்டாக்கி வங்கியின் விவரங்கள் பெற்றுக்கொண்டு பணத்திருட்டில் ஈடுபவர்கள் என்பது நாம் அறிந்த உண்மையே. ஆனால் பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் தமிழகத்தில் மோசடி நடந்து இருக்கிறது. இது குறித்து காவல் துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில் வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தி வேலை வேலை இல்லாமல் இருக்கும் நபர்களை குறிவைத்து இந்த மோசடி நடப்பதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த மோசடி சம்பவம் 2024 ஆம் ஆண்டு நடந்துள்ளதாகவும். பாதிக்கப்பட்டவரின் டெலிகிராமில் பகுதி நேர வேலை தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்று வந்துள்ளது. அந்த செய்தியை அடிப்படையாக வைத்து அவர் மேலும் விவரங்கள் பெற தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இருக்கிறார்.
அப்போது ஒரு நபர் தன்னை “Room Raccoon Backend Website” நிறுவனத்தில் பணியாற்றுபவர் என அறிமுகப்படுத்தி இருக்கிறார். அடுத்ததாக எங்கள் நிறுவனத்திற்கு உங்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்கள். மேலும் ஹோட்டல்களின் கூகுள் ரெவ்யூ வில் மதிப்பெண்கள் வழங்குவதுதான் உங்களுடைய வேலையாக இருக்கும் என அறிவித்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த வேலையை செய்ய தங்கள் நிறுவனத்திற்கு ரூ.959 கமிஷன் கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் 8000 ரூபாய் முதலீடு செய்து இருக்கிறார் அந்த நபர் அவருக்கு 15,917 கமிஷனாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் 90 ஹோட்டல்களில் முதலீடு செய்ய ரூ.10,90.000/- பணம் பெற்று இருக்கிறார்கள்.
அது மோசடி என அறிந்த பின் போலீசாரிடம் புகார் அளித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் செல்வகுமார் மற்றும் கௌதம் குமார் ஆகிய இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.