கஞ்சா குடிக்கிகளை கட்டம் கட்டிய காவல்துறை!! கொத்து கொத்தாக மாட்டிய கல்லூரி மாணவர்களும் கஞ்சா பொட்டலங்களும் !!

0
110
Police in Coimbatore arrested 6 kg of ganja and arrested 7 people including college students

Coimbatore:கோவையில்  போலீசார் நடத்திய சோதனையில்  சிக்கிய 6 கிலோ கஞ்சா மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

கோவை , சென்னை போன்ற மாநகரங்களில் மாணவர்கள் கல்விக்காக தங்கி படித்து வருகிறார்கள்.  இது போன்ற மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். இந்த போதை பழக்கம் பிடி , சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சா சாக்லேட் , மெத்தா பெட்டமைன்  என்ற அளவுக்கு அதிகரித்து மாணவர்களின் வாழ்க்கையை அழித்து வருகிறது.

எனவே போதை பொருட்களை விற்பது , வாங்குவதை தடுக்க   காவல்துறை இதற்காக தனி துறையை அமைத்துள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில், கஞ்சா, கஞ்சா சாக்லேட் பதுக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதாவது கோவை மாவட்டத்தில் , கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி வேலை பார்க்கும் இளைஞர்கள் விடுதியில் தங்கி வருகிறார்கள் அவர்கள் குறி வைத்தே  போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது.

குறிப்பாக  கோவை  செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் போதைப்பொருள்  விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே சோதனையின் அடிப்படையில் 450 காவல் துறையினர் நேற்று அதிகாலை முதல் அதிரடி  கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில்  சோதனை செய்தார்கள்.

இந்த சோதனை முடிவில் 6 கிலோ கஞ்சா, 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 42 திருடப்பட்ட நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 6 மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.