பிரபல நடிகையின் கணவரை பற்றிய போலீசாரின் தகவல்! இத்தனை வீடியோக்களா?

0
169
Police information about the husband of the famous actress! So many videos?

பிரபல நடிகையின் கணவரை பற்றிய போலீசாரின் தகவல்! இத்தனை வீடியோக்களா?

ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் லேப்டாப்பில் இருந்து மட்டும் 68 ஆபாச வீடியோக்கள் கைகளில் சிக்கியதாக கோர்ட்டில் போலீசார் தெரிவித்துள்ளனர். சினிமா மற்றும் குறும்படங்களை இயக்குகிறேன் என்றும் அதில் நடிக்க வைப்பதாகவும், பலருக்கு ஆசை வார்த்தை கூறி பல பெண்களை ஏமாற்றி ஆபாச படங்கள் எடுப்பது மற்றும் அதை செல்போன்களில் வெளியிட்டது.

கடந்த 2019 ம் ஆண்டு நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது நடிகைக்கும் பெரும் அவமதிப்பாக இருக்கிறது. அவரிடமும் செய்தியாளர்கள் சூழ்ந்து கேள்விகளை கேட்க தொடங்கினர். இதன் காரணமாக அவர் பல நிறுவனங்கள் மீது அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார். அவர் மீதும் சிலர் சந்தேக பார்வையை வீச தொடங்கியதால் அவர் இது குறித்து பேச எதுவும் இல்லை என கூறிவிட்டார்.

இந்த குற்றச்சாட்டுக்களின் பெயரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் மற்றும்  தொழில் அதிபரான ராஜ் குந்த்ரா என்பவரை கடந்த 19ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழில் அதிபரான அவர் மற்றும் அவரது ஆலோசகர் ரயான் தர்பே இருவரும் தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த தொழிலதிபருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்ப வில்லை என்றும், அனுப்பாமலேயே அவர்களை கைது செய்து விட்டனர் என்றும் அவர் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த போலீஸ் தரப்பு வக்கீல்  அருணா காமட் பாய் கூறும்போது, கைது செய்யப்படுவதற்கு முன் இருவருக்குமே முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் அவர்களின் சில வாட்ஸ்அப் தகவல்கள் நீக்கப்பட்டதும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் அவர் இதில் சிலவற்றை மட்டுமே மீட்க முடிந்துள்ளது என்றும், எவ்வளவு தரவுகள் நீக்கப்பட்டுள்ளது என்பது கூட தெரியவில்லை. அதை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆதாரங்களை அழித்தால், விசாரணை நிறுவனம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தொழில் அதிபரின் அலுவலகத்தில் இருந்து அவரது  லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதில் மட்டும் மொத்தம் 68 ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே அவரது நெட்வொர்க் ஸ்டோரேஜ் ஏரியாவில் இருந்த ஐம்பத்தொரு வீடியோக்களும் கைப்பற்றி போலீசார் வசம் தற்போது உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த தொழிலதிபரின் வக்கீல் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

மேலும் அவர் எடுத்திருக்கும் படங்கள் பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் அல்ல என்றும், பாலுணர்வை எளிமையாகச் சொல்லும் கலை அம்சம் கொண்டவை என்றும், தனது கட்சிக்காரர்  அப்படித்தான் படமெடுத்திருக்கிறார் என்றும் அவரை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் தொடர்ந்து வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட ஐகோர்ட் ராஜ் குந்த்ரா மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.