கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!…
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டிலிருந்து 3.15 கிலோ தங்கம் வியாழக்கிழமை அன்று தனிப்படை போலீசாரால் மீக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைக்கொள்ளையில் அமல்ராஜிற்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கம் வங்கி கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காவல் ஆய்வாளர் வீட்டில் மூன்று புள்ளி ஐந்து கிலோ தங்கம் மீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரும்பாக்கம் ரசாப் கார்டன் சாலையில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்திருந்தது. அந்த வங்கியில் கடந்த 13 ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
கொள்ளையர்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அதில் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அந்த வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி வந்த கொரட்டூரை சேர்ந்த முருகன் என்பவர் தான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்தது.
வங்கிக் கிளையிலே பணியாற்றி வங்கியிலே கொள்ளை அடிக்க சதி திட்டத்தை நிறைவேற்றி இருப்பது தெரியவந்தது. தனிப்படையினர் கொள்ளை நடந்த 24 மணி நேரத்திற்குள் வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த மோ.சந்தோஷ் அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் வீ.பாலாஜி மற்றும் செந்தில்குமரன் ஆகிய மூன்று பேரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து 8.5 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்க நகைகள்,இரண்டு கார்கள்,மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனிடையே தற்போது காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிட நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி உத்தரவு வெளியிட்டுள்ளார். காவல் ஆய்வாளரை பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் போலீசார்களிடம் சற்று பரபரப்பு ஏற்பட்டு வந்தது.